இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-25 02:55 GMT
புளியங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சாா்பில் புளியங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புளியங்குடி பெருந்தலைவா் காமராஜா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் மருத்துவா்கள் கலைச்செல்வன், மீரா ஷீபா, மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்லூரி யோகா ஆசிரியா் மணிமாறன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Tags:    

Similar News