இலவச மருத்துவ முகாம்

எர்ரபையனஹள்ளி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் மூலம் நடைபெற்றது.

Update: 2024-06-17 05:50 GMT

இலவச மருத்துவ முகாம்

தர்மபுரியில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு ஏழை மக்களுக்கு சென்றடையும் வகையில் மனித நேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர். மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் மூலம் இரத்ததானம் முகாம், மாற்றுத்திறனாளி களுக்கு மருத்துவ உதவிகள், ஏழ்மையில் உள்ளவர் களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், இண்டூர் எர்ரபையனஹள்ளி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் மை தருமபுரி மணீஷ் மருத்துவ சேவை திட்டம் மூலம் நடைபெற்றது. இதில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை இருதயம்‌ சார்ந்த பரிசோதனை, சேலம் வள்ளி ஆர்த்தோகேர்‌ எலும்பு சார்ந்த பரிசோதனை, தருமபுரி கவிதா கிளினிக் சார்பாக பொது மருத்துவம், தியா பல் மருத்துவமனை சார்பாக பல் பரிசோதனை, MK மருத்துவமனை சார்பாக இருதயம் பரிசோதனை, வாசன் கண் மருத்துவமனை சார்பாக கண் பரிசோதனை, ரங்கா இரத்த பரிசோதனை நிலையம் சார்பாக இரத்த பரிசோதனை ஆகிய இலவச‌ மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா,அருணாசலம், முஹம்மத் ஜாபர்,வள்ளி தமிழ்செல்வன், ஹரிணி ஸ்ரீ, அலெக்சாண்டர், சண்முகம், எர்ரபையனஹள்ளி கிராம ஊர் கவுண்டர், சதீஸ் குமார் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.

Tags:    

Similar News