வடகிழக்கு பருவமழை: குறிஞ்சிப்பாடி அருகே இலவச மருத்துவ முகாம்
Update: 2023-11-07 05:27 GMT
மருத்துவ முகாம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவக்குழு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிகிச்சை பெற்றனர்.