குறிஞ்சிப்பாடி அருகே இலவச மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டை பகுதியில் மக்களை தேடி மருத்துவம் மூலம் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.;
Update: 2024-04-14 03:24 GMT
இலவச மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் மூலம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.