உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் மற்றும் சேலம் கோபி மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது.;
Update: 2024-04-18 14:49 GMT
இலவச மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் ,ராசிபுரத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் மற்றும் சேலம் கோபி மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ பரிசோதனை முகம் நடைபெற்றது. இந்த முகாமை வார்டு கவுன்சிலர் கேசவன், நகர வளர்ச்சி மன்ற தலைவர் முன்னாள் திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் வி.பாலு, மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆலோசனையை பெற்று சென்றனர். இந்த நிகழ்வில் கோபி மருத்துவமனை மருத்துவர் மாதேஸ்வரன், மற்றும் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ் கார்த்தி அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.