வாங்கல் அருகே இலவச இயற்கை வேளாண் பயிற்சி
வாங்கல் அருகே இலவச இயற்கை வேளாண் பயிற்சி நடைபெற்றது;
இலவச வேளாண் பயிற்சி
இலவச வேளாண் பயிற்சி
ரோட்டரி கிளப் ஆப் கரூர் டெக்ஸ் சிட்டியும், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வானகம் மையமும் இணைந்து கரூரில் முதன்முதலாக நடத்திய இலவச வேளாண்மை பயிற்சி முகாம், கரூர் அடுத்த வாங்கல் அருகே உள்ள வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பயிற்சி பெறுவதற்காக, திருச்சி, தஞ்சை, திருப்பூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று துவங்கி இன்று வரை நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் இயற்கை வழி வேளாண்மை, பறவைகளிடமிருந்து பயிர்களை காக்கும் முறை, கால்நடை வளர்ப்பு, பூச்சி கட்டுப்பாடு, பண்ணையம் மற்றும் உயிர் வேலி அமைத்தல், நிரந்தர வேளாண்மை களப்பயிற்சி, இடுபொருள் செய்முறை பயிற்சி, வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை, பயிற்றுநர்கள் ரமேஷ், கரிகாலன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் வழங்கினர்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாட்டினை ரோட்டரி கிளப் கரூர் சிட்டி தலைவர் பாக்கியராஜ், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் சசிகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். திட்ட ஆலோசகராக மணிவண்ணன், திட்டத் தலைவர் பிரபாகரன், திட்ட துணை தலைவர் கனகராஜ் உள்ளிட்டோர் பயிற்சிக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜேந்திரன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி, கரூர் வெற்றி விநாயகா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சி முகாமை சிறப்பித்தனர்.