விலையில்லா பட்டா வழங்கல்
பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை வழங்கிய அமைச்சர்.;
Update: 2024-03-08 11:50 GMT
பட்டா வழங்கல்
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார்.
உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.