ஏழைகளுக்கு சோலார் மின்விளக்குகள்

பட்டுவாரி நகர் பகுதியில் மின்சார வசதி இல்லாமல் தத்தளித்த ஏழைகளுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சோலார் மின்விளக்குகள் வழங்கப்பட்டது.

Update: 2024-05-17 04:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுவாரி நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பலதரப்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .

இவர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களுக்கென்று எந்தவித இடமும் ஒதுக்கப்படாததால் அரசு மேல்கால் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்..இவர்களுக்கு அரசு தங்கள் குடிசைகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் மின்சாரம் வழங்கவில்லை என தெரிய வருகிறது.

இதனால் கடந்த 10 ஆண்டு காலமாக வசித்து வந்த மக்கள் மின்விளக்கு வசதி இல்லாததால் 50 குடும்பங்கள் இருளிலே இருந்து உள்ளனர்..இதனை அறிந்த சமூக ஆர்வலர் ஆதிகேசவன் எண்ணங்களில் சங்கமம் என்ற தொண்டு நிறுவனமான மூலமாக பூமிகா டிரஸ்ட் அவர்களை தொடர்பு கொண்டு எங்கள் கிராமத்தில் பலர் இருளில் உள்ளதாக உதவி கேட்டுள்ளார்.. அந்த நிறுவனம் தகுதி வாய்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் மின் விளக்குகளை இலவசமாக வழங்கி உள்ளது.

Tags:    

Similar News