ஏற்காடு கோடை விழாவையொட்டி இலவச வாகன பழுதுபார்க்கும் முகாம்

ஏற்காடு கோடை விழாவையொட்டி இலவச வாகன பழுதுபார்க்கும் முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-05-23 11:55 GMT

ஏற்காடு கோடை விழாவையொட்டி இலவச வாகன பழுதுபார்க்கும் முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.


சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சியையொட்டி சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காட்டில் இலவச வாகன பழுதுபார்க்கும் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முகாமை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவருக்கு சங்க நிர்வாகிகள் சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவராஜன், பொருளாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்காடு கோடை விழாவுக்கு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருகை தரும் சுற்றுலா பயணிகள், தங்களது வாகனங்கள் திடீரென பழுது ஏற்பட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பழுதை நீக்கி உதவி செய்யப்படும். எனவே, சுற்றுலா பயணிகள் எவ்வித பயமின்றி மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை கண்டுகளிக்க ஏற்காட்டிற்கு வரலாம் என சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News