இலவச கைப்பந்து பயிற்சி நிறைவு விழா

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச கைப்பந்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.;

Update: 2024-06-02 14:28 GMT

தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டுக்கான கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த மே மாதம்15ம் தேதி முதல் 31ம் தேதி வரை தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சிகளில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயன் பெற்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று பயிற்சி நிறைவு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது .தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சப்தகிரி கல்லூரி நிறுவனத் தலைவர் எம்ஜி சேகர், பூக்கடை ரவி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இதில். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், குட்டி மணி, இணை செயலாளர்கள் நிர்மல் குமார் மாது பாலு தனபால் ஜெயபால் வணங்காமுடி சசிகுமார் ராம் செந்தில்குமார் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News