பழவியாபாரி தற்கொலை
தூத்துக்குடியில் பழவியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திக் உள்ளது.;
Update: 2024-03-30 01:49 GMT
தற்கொலை
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவில் வசிப்பவர் சிவமுருகன் மகன் சிவக்குமார் (19). இவர் அங்கு தனது தந்தையுடன் சேர்ந்து பழம் வியாபாரம் செய்து வருகிறார். மேலும், இவர் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் வாழ்க்கையில் மன வேதனை அடைந்த சிவக்குமார் அருகிலுள்ள ஒரு குடோனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.