திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்!
திருவண்ணாமலையில் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி பெண்கள் கிரிவலம் சென்றனர்.
Update: 2024-03-25 07:33 GMT
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் . பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலில் நடந்து செல்ல முடியாத சில பெண்கள் மாட்டு வண்டியில் அமர்ந்தபடி கிரிவலம் சென்றனர்.