களஞ்சியம் கலை பண்பாட்டு குழு சார்பில் நிதிஉதவி
களஞ்சியம் கலை பண்பாட்டு குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதிஉதவி அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 16:37 GMT
மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது
களஞ்சியம் தமிழ் கலை பண்பாட்டு குழு சார்பில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது.
இதில் களஞ்சியம் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி மற்றும், சான்றிதழ்கள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை களஞ்சியம் தமிழ் கலை பண்பாட்டு குழு நிறுவனரும், சேலம் மாநகராட்சி செயற்பொறியாளருமான பழனிச்சாமி செய்திருந்தார்.
இதையடுத்து கல்வி நிதி உதவி பெற்ற மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் மற்றும் களஞ்சியம் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் மாநகராட்சி பொறியாளர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்தனர்.