வெள்ளத்தில் இடிந்த வீடுகளுக்கு நிதியுதவி : குவிந்த மக்கள்!
தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
Update: 2024-03-15 02:08 GMT
தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை பெருவெள்ளத்தில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.5ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டுவதற்காக, பகுதியாக இடிந்த வீடுகளுக்கு ரூ.2லட்சம், முழுமையாக இடிந்த வீடுகளுக்கு 4.லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் அளித்து வருகின்றனர். இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிகிறது. இப்பணிகள் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.