விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலய கும்பாபிஷேக விழா

முனியப்பனூரில் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-17 12:06 GMT

முனியப்பனூரில் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, நெரூர் வடபாகம் கிராமத்தில் உள்ள வாங்கல் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முனியப்பனூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாசி பெரியசாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று காலை மங்கல இசையுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில், தமிழ் திருமுறை பாராயணம், நான்காம் கால யாக வழிபாடு, நாடி சந்தானம், ஸ்பர் ஸாருதி, உயிர் சக்தியை இறைவிக்கு சேர்த்தல், நான்மறை நாயகிக்கு கால மகா பூர்னருதி, தீபாதாரணை, யாத்ரா தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசத்திற்கு எடுத்துச் சென்று, புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

மேலும், கோவிலில் உள்ள அனைத்து மூலஸ்தான சுவாமிகளுக்கும் கும்பாபிஷேக சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் கோ பூஜையும் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகா தீபாதாரணை நடைபெற்று நிகழ்ச்சிகள் இனிதே முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் நெரூர் வடபாகம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News