கஞ்சா விற்றவர் கைது
மாரண்டஅள்ளி அருகே திம்லாமேட்டில் கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-07-04 03:50 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே திம்லாமேடு கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவலர்கள் தீவிர ரோந்து சென்றனர். அப்போது திம்லாமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காலர்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து காவலர்கள் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாது என்பதும், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்