பரமத்தி வேலூரில் மலைபோல் குவிந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு.
பரமத்தி வேலூரில் மலைபோல் குவிந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. வேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஓட்டல்கள், பலகாரக் கடை கள், பேக்கரிகள், டீக்கடைகள், ஜவுளி கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், செருப்பு கடைகள், சிற்றுண்டி கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. உற்பத்தியாகி வருகிறது. இதனால் அருகில் உள்ள குடி யிருப்பு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. மேலும் பரமத்தி வேலூர், கரூர் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்ட எல்லை ஆரம்பம் ஆகும் இடம்.
எனவே நாமக்கல் மாவட்டத் திற்குள் நுழைபவர்களை துர்நாற்றத்துடன் வரவேற்கும் துர்பாக்கியம் பரமத்திவேலூருக்கு ஏற்பட்டுள் ளது. தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்திருந்தும் பிளாஸ்டிக்பை உப யோகத்தை அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. எனவே மாவட்ட எல்லை யில் ஏற்பட்டுள்ள சுகதாரக் கேடு குறித்து மாவட்ட நிர் வாகம், டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதி காரிகள், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மலை போல் குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடி யாக அகற்றி மீண்டும் அங்கு அசுத்தம் செய்யாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.