திருமழிசை அருகே சாலையோரம் குவியும் குப்பை: தொற்று நோய் பரவும் அபாயம்
திருமழிசை அருகே சாலையோரம் குவியும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 16:17 GMT
சாலை ஓரம் குவிந்துள்ள குப்பை
திருமழிசை அடுத்துள்ளது வரதராஜபுரம் ஊராட்சி. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பை முறையாக அகற்றப்படாமல், பல இடங்களில் குவிந்து கிடக்கின்றன. மேலும், கால்நடைகள் இரைதேடும் போது, குப்பையை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், அப்பகுதி வழியே செல்லும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.