கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - பொருட்கள் சேதம்

குன்னம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.;

Update: 2024-06-26 07:12 GMT

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் முத்து வயது 42, இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி - பானுமதி வயத 37, இவர்களது - மகன்கள் சர்வேஷ் -11, பாவேஷ் -9, இதில் சர்வேஷ் ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பும், பாவேஷ் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 25ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் பானு மதி தனது மகன்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டிற்குள் இருந்து புகை வரவே அருகே இருந்தவர்கள் பானுமதிக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து பானுமதி அவரது வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீடு முழுவதும் தீப் பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நிலைய அலுவலர் பொறுப்பில் உள்ள கரிகாலன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிற் குள் இருந்த பிரிட்ஜ், பீரோ, கிரைண்டர், கட்டில் மற்றும் 7 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகின. மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து ஏற்பட்டபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News