பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து

உளுந்துார்பேட்டை அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேரை கத்தியால் குத்திய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-31 06:28 GMT

பெட்ரோல் பங்க் கத்திகுத்து

உளுந்துார்பேட்டை அடுத்த பாதுாரைச் சேர்ந்தவர் சம்பத் மகன் ராஜதுரை, 24; இவர் நேற்று முன்தினம் உளுந்துார்பேட்டை செங்குறிச்சி பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடச் சென்றார். அப்போது அவர் வைத்திருந்த மொபைல் போன் காணவில்லை. இதனால் ராஜதுரைக்கும், பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.பின், ராஜதுரை நேற்று மதியம் 2:30 மணியளவில் பெட்ரோல் பங்க் வந்தார். அப்போது மீண்டும் மொபைல் போன் குறித்து பங்க் ஊழியர்களிடம் கேட்டார்.

இதனால் ராஜதுரைக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜதுரை, பெட்ரோல் பங்க் ஊழியர்களான செம்மணங்கூர் முருகானந்தம், 45; வண்டிப்பாளையம் கண்ணன், 29; வேம்பி சிவசங்கரன், 22; ஆகிய 3 பேரையும் கத்தியால் தாக்கினார். காயமடைந்த 3 பேரும் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News