நடைபாதை கடைகளை அகற்றணும் !

காமாட்சியம்மன் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Update: 2023-12-30 04:12 GMT

காமாட்சியம்மன் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவில் அருகில் உள்ள சன்னிதி தெரு மற்றும் மாட வீதிகளின் இருபுறமும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால், காமாட்சியம்மன் கோவில் அருகில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், கோவில் அருகில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், காமாட்சியம்மன் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், கோவிலுக்கு செல்லும் எட்டு தெருக்களில், ஊர்க்காவல் படையினர் 16 பேர் சுழற்சி முறையில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலுக்கு செல்லும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை ஊர்க்காவல் படையினர் திருப்பி அனுப்புவதோடு, அப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இருப்பினும், கோவில் அருகில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்."

Tags:    

Similar News