கிரிவலம்-பாதுகாப்பு பணிக்காக 3 உட்கோட்ட போலீசார் அணிவகுப்பு

வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவலம் பாதுகாப்பு பணிக்காக 3 உட்கோட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-24 14:52 GMT

வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவலம் பாதுகாப்பு பணிக்காக 3 உட்கோட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் உலக பிரசித்திப்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.இந்த வேதகிரீஸ்வரர் மலை 4 (மலையாக) வேதங்களாக கருதப்படுகிறது. மேலும் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் இத்தலம் விளங்கி வருகிறது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறப்பது வழக்கம் , அதன் படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கு பிறந்தது. இதனைக் லட்சக்கணக்கானோர் வந்து புதிய சங்கை தரிசித்து சென்றனர். இது போன்று பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் பெளர்ணமி கிரிவலத்திற்கு உகந்ததாக விளங்கி வருகிறது.

மாதந்தோறும் பெளர்ணமி நாளில் திருவண்ணாமலைப் போன்று திருக்கழுக்குன்றத்திற்கும் சமீப காலமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று இரவு வரை (இரண்டு நாட்கள் ) பௌர்ணமி நாளாக கருதப்படுவதால் லட்சக்கணக்கில் கிரிவலம் வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி.ரவி அபிராம், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் நடராஜன், எஸ்.ஐ.செந்தில்வேல் ஆகியோர் மேற்பார்வையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய காவல் உட்கோட்டங்களுக்குட்பட்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார் பக்தர்கள் செல்லும் கிரிவல பாதையில் அணிவகுப்பு நடத்தினர். பின்னர் கிரிவலப் பாதையை சுற்றியுள்ள கொத்தி மங்கலம் கூட்ரோடு, ஆசிரியர் நகர் மற்றும் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம், அடிவாரப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News