இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : போலீசார் விசாரணை !
தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 11:16 GMT
தற்கொலை
தூத்துக்குடி அருகே உள்ள கீழ வைப்பார் கிராமம் வடக்கு காலனியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் மகள் மோனிஷா (23) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து உள்ளார் இதற்கிடையே அவரது தாயார் மோனிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்தாராம். ஆனால் மோனிஷா திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினாராம். ஆனாலும் அவரது தாயார் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாராம்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மோனிஷா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.