சேலம் அருகே சிறுமி கர்ப்பம் - போலிசார் விசாரணை
சிறுமி கர்ப்பமானது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-09 07:08 GMT
Girl pregnancy
சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமி கர்ப்பமானது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.