1000 என்ற வடிவத்தில் அணிவகுத்து அசத்திய மாணவிகள்
புதுமைப்பெண் 1000 என்ற வடிவத்தில் அணிவகுத்து நின்று மகளிர் தின சிறப்பை மாணவிகள் வெளிப்படுத்தினர்.;
Update: 2024-03-09 06:39 GMT
மகளிர் தின சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் 1000 என்ற வடிவத்தில் அணிவகுத்து நின்று மாணவிகள் அசத்தினர்.
பெரம்பலூர் - துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு , 3000-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி தொடர்கின்ற மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் "புதுமைப்பெண்" திட்டத்தின் சிறப்பை பாராட்டும் வகையில், தமிழக வரைபடத்திற்குள் புதுமைப்பெண் 1000 என்ற வடிவத்தில் மாணவிகள் அணிவகுத்து நின்று அழகான காட்சியை உருவாக்கினர். இதனைத் தொடர்ந்து மகளிர் தின விழாவை இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.