பாஸ்ட் புட் சாப்பிட்ட சிறுமி திடீர் மரணம்

சேலத்தில் பாஸ்ட் புட் சாப்பிட்ட சிறுமி திடீர் மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-27 09:19 GMT

சிறுமி பலி 

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார் மகள் லட்சுமிகுமாரி (வயது 7). லட்சுமிகுமாரி, அவரது தாத்தா வாங்கி தந்த பாஸ்ட் புட் சாப்பிட்டுள்ளார். அன்று இரவு அவருக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் லட்சுமிகுமாரி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அழகாபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு சிறுமி இறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் அறிக்கை வந்த பிறகு தான் சிறுமி எப்படி இறந்தார்? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News