துண்டுபிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு!
துண்டுபிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Update: 2024-03-27 07:27 GMT
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேருந்து நிலையத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 23-கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 179-விராலிமலை சட்டமன்ற தொகுதியில், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த துண்டுபிரசுரங்களை வாக்காளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி அவர்கள், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.