ஞானமணி கல்வி நிறுனங்களில் ஞான் பெஸ்ட் 2கே24

ஞானமணி கல்வி நிறுனங்களில் ஞான் பெஸ்ட் 2கே24 என்ற தலைப்பில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா

Update: 2024-04-11 09:36 GMT

ஞானமணி கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஞான் பெஸ்ட் 2கே24 என்ற தலைப்பில் நடைபெற்றது. ஞானமணி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் பி.பிரேம்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி ப.மாலாலீனா மற்றும் துணைத் தலைவர் திருமதி மதுவந்தினி அரங்கண்ணல் அவர்கள் விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி.அரங்கண்ணல் அவர்கள் தனது தலைமையுரையில் மாணவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்றும் சினிமா என்பது சக்தி மிகுந்த ஆயுதம் அது பல தலைவர்களை உருவாக்கி உள்ளது என்று கூறினார். சினிமா என்பது ஒரு தியானம் நிஜ உலகில் நடக்க இயலாததை நாம் சினிமா வடிவில் சாத்தியமாக்கலாம் என்றும் நடிகர் ஜீவா அவர்கள் நடிப்பினை பாராட்டி பல தேசிய விருதுகள் வாங்கவேண்டும் என்று வாழ்த்தினார். மேலும், நடிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதாக நடிகர் ஜீவா அவர்கள் கூறியதாக கூறினார்.

ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர்; தி.கே.கண்ணன், ஞானமணி கல்வியியல் கல்லூரியின் டீன்; முனைவர்; எஸ்.ஆரோக்கியசாமி ஆகியோர் ஆண்டறிகைகளை சமர்ப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழ்பட சினிமா நடிகர் ஜீவா அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் நாமக்கலிற்கு வருவது இதுவே முதல் முறை என்றும், தனது நடிப்பின் மூலம் சிரிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது எல்லாம் சதம் காண்கிறாரோ அப்பொழுது எல்லாம் இது உங்களது சிறந்த ஆட்டமா? என்று கேட்டால் அது இன்னும் வரவில்லை என்று கூறுவார். அது போல மாணவர்களும் தங்களின் முழு செயல் திறனையும் தங்களின் சிறந்த பதிப்பிற்காக வெளிபடுத்துமாறு கூறினார். கல்லூரி வாழ்க்கை என்பது திரும்ப வராது அதனால் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். எனக்கு நிறைய வழிகாட்டிகள் இருந்தார்கள் அதனால் தான் என் வாழ்க்கை வெற்றியடைந்ததாகவும் அது போல் மாணவர்கள் குருக்களிடம் அறிவுரைகளை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றார். கல்லூரி வாழ்க்கையே நமக்கு நல்ல நினைவுகளை கொடுக்கும் என்று கூறினார். சமூக வலைதளங்களில் இருந்து நமது கவனத்தை சிதறவிடாமல் எவ்வாறு அதை கொண்டு வாழ்வில் முன்னேற முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் விசுவல் கம்யூனிகேசன் துறையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தோல்வியே ஒருவனுக்கு கிடைக்கப்பெறும் வெற்றியின் முதல்படி என்று கூறினார். மாணவர்கள் தாங்கள் இருக்கக் கூடிய துறையில் வெற்றியையோ, தோல்வியையோ பற்றி கவலைப்படாமல் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு வெளிப்படுத்தும் போதே வெற்றி கிடைக்கும் என்று கூறினார். முடிவை காட்டிலும் செயல் முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், புன்னகையுடன் எதையும் செய்ய வேண்டும் என்று கூறினார். கிரிக்கெட் வீரர் தோனியிடம் இருந்து மனநிலையை அதாவது கடினமான சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். “செவட்டுத் தவளை” என்ற ஊடகத்தை ஆரம்பித்துள்ளதாகவும், அது சாதாரண மக்கள் தங்கள் திறமை வெளிப்படுத்த கருவியாக அமையும் என்று கூறினார். முதலில் நாம் நம்மை நேசிக்க வேண்டும் அவ்வாறு நேசிப்பதன் மூலம் கிடைக்கும் தன்னம்பிக்கையை கொண்டு நம்மால் எதையும் எளிதில் சாதிக்க முடியும் என்று கூறினார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி போலவே இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மாணவர்களுடன் சேர்ந்து பாடல்கள் பாடியும் நடனங்கள் ஆடியும் மகிழ்வித்தார். இறுதியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாணவ மாணவிகளுக்கு சிறந்த செயல் திறனுக்காகவும், வகுப்பில் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், நூலகத்தினை சிறப்பாக பயன்படுத்தியதற்கும், 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களின் கல்வி ரிசல்ட் சாதனைக்காகவும், இதழ் மற்றும் நூல் வெளியிட்டதற்கும் மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி இயக்குநர் முனைவர் பி.சஞ்செய் காந்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Tags:    

Similar News