வயலில் இறங்கி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!
வயலில் இறங்கி விவசாயிகளிடம் வாக்கு கேட்டும் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு!
Update: 2024-04-15 06:26 GMT
வயலில் இறங்கி விவசாயிகளிடம் வாக்கு கேட்டும் டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்த சிவகங்கை அதிமுக வெற்றி வேட்பாளர் சேவியர் தாஸ். வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழக முழுவதும் நடைபெற உள்ளது இந்நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தற்பொழுது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கத்தக்குறிச்சி கிராமத்தில் சிவகங்கை வெற்றி வேட்பாளர் சேவியர் தஸ் மற்றும் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கத்தக்குறிச்சி கிராமத்தில் வயலில் நாற்று நட்டு கொண்டிருந்த விவசாய பெண்களிடம் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார் அப்பொழுது அங்கிருந்த பெண்கள் கண்டிப்பாக நாங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களிப்போம் என தெரிவித்தனர் வேட்பாளர் சேவியர் தாஸ் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு விவசாயி போல் வயலில் இறங்கி வாக்கு சேகரித்தது அங்குள்ள மற்ற விவசாயிகளிடையே எழுச்சியையும் பொதுமக்களிடையே புத்துணர்ச்சி அளித்தது அதனை தொடர்ந்து அக் கிராமத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு செகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் பின்னர் பேசிய வேட்பாளர் சேவியர் தாஸ் விடியா திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மீண்டும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் என ஆகவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.