கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.4000க்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் 10 கிலோ ஆடு ரூ 4000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-03-23 07:03 GMT

 ஆடு விற்பனை

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டு சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அவற்றை வாங்குவதற்கு சென்னை, மதுரை, கோவை,திருச்சி போன்ற நகரங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் ரூ.5000க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ. 4000க்கு விற்பனையானது. இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதோடு குறைந்த எண்ணிக்கையிலான வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர் இதனால் விலை குறைந்து காணப்பட்டது. ஆடுகளுக்கு தேவையான தீவனம் கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது அதனால ஆடுகளின் விலை வெகுவாக குறைந்தது.
Tags:    

Similar News