ஆடு திருடியவர் கைது

தூத்துக்குடி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.;

Update: 2024-07-03 02:26 GMT

கைது

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (44). விவசாயி. இவர் சொந்தமாக 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டுள்ளார். பின்பு வீட்டுக்கு திரும்பிய ஆடுகளில் ஒரு ஆடு இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அருகில் உள்ள பகுதிகளில் ஆட்டை தேடியுள்ளார். அப்போது அத்திமரப்பட்டி பொன்னகரம் பகுதியில் நெல்லை மானுர் பகுதியை சேர்நத முருகன் மகன் ஆனந்தராஜ் மற்றும் முத்தையாபுரத்தை சேர்ந்த மாயாண்டி மகன் மகாராஜா ஆகியோர் திருடிய அவரது ஆட்டை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

Advertisement

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளையும், ஆட்டையும் கீழே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். சுதாரித்துக் கொண்ட தங்கராஜ் துரத்தி சென்று, ஆனந்தராஜை பிடித்தார். மகாராஜா தப்பி ஓடிவிட்டார். ஆனந்தராஜை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் தங்கராஜ் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தலைமறைவான மகாராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News