பாலசுப்பிரமணியருக்கு தங்க கவச அலங்காரம்
Update: 2023-11-19 07:14 GMT
வள்ளி,தெய்வானையுடன் பாலசுப்ரமணியர்
திருக்கோவிலூர் ஹாஸ்பிடல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் கடந்த 13ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் தங்க கவச அலங்காரம் தீபாதாரனை நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை தீபாரதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.