காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் பிடிபட்ட தங்க நகைகள்

காஞ்சிபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தங்க நகைகள் பிடிபட்டன.;

Update: 2024-03-19 14:34 GMT

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் கடந்த இருதினங்களுக்கு முன்பே அமுலுக்கு வந்தது அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பறக்கும் படைகளும் 12 நிலைக்குழு வாகனங்கள் , நான்கு காணொளி குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள் அனைத்தும் தங்கள் பணிகளை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவை இன்றி பணங்களை எடுத்து செல்வது மற்றும் பொருட்களை எடுத்து செல்வது தவறான செயல் எனவும் இதனைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் நகை சப்ளை செய்யும் வாகனம் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதனை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அவ்வாகனத்தில் சென்னையின் பிரபல நகைக்கடை நிறுவனத்தின் கிளைகளுக்கு நகைகள் எடுத்து செல்வதாகவும் அதற்கான ஆவணங்கள் உள்ளதாகும் தெரிவித்த நிலையில் , அதில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் குழு அவ்வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து அங்கு ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து போதிய ஆவணங்களுடன் விரைவாக வருமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதே போல் வாலாஜாபாத் பகுதியில் மற்றொரு நகைக்கடை வாகனமும் இதே நிலையில் சிக்கி உள்ளது அதனையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்டது முதல் மாலை 6 மணிக்கு மேல் ஏடிஎம் வாகனங்கள் மற்றும் இது போன்ற வாகனங்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியிருந்த நிலையில் அதனை அலட்சியமாக செயல்பட்டதால் தற்போது ஆவணங்கள் இருந்தும் இது போன்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News