தங்கமோதிரம் வழங்கிய தங்கம் தென்னரசு
காரியாபட்டி அருகே போலியோ சொட்டு மருந்து பணிகளை துவக்கி வைத்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , மார்ச் 1-ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,50,830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகம் நடைபெற்று வருகிறது. 1137 மையங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர் .
அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளை தமிழ்நாடு நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார். மேலும் சொட்டு மருந்து முகாமில் இருந்த குழந்தைகளுக்கு . சொட்டு மருந்தினை அமைச்சர் தங்கம்தென்னரசு செலுத்தினார். மேலும் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.