வதான்யேஸ்வரர் ஆலயத்தில் மேதா தட்சிணாமூர்த்திக்கு தங்க கவச அலங்காரம்

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வியாழனை முன்னிட்டு மேதா தட்சிணாமூர்த்திக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்;

Update: 2023-12-15 02:18 GMT

வதான்யேஸ்வரர் ஆலயத்தில் மேதா தட்சிணாமூர்த்திக்கு தங்க கவச அலங்காரம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. குரு பரிகார ஆலயமான இங்கு , ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. இவ்வாலயத்தில் கார்த்திகை மாத கடைசி வியாழக் கிழமையை முன்னிட்டு, மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு, தங்க கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை சோடச தீபாரதனை மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News