அரசு பேருந்து - கார் மோதல் : போக்குவரத்து பாதிப்பு
காங்கேயத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானா அருகில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் அரசு பேருந்தும் காரும் சிக்கனில் இருந்து காங்கேயம் பேருந்து நிலையம் செல்வதற்கு ரவுண்டானாவில் வலது பக்கமாக திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக பேருந்தின் வலது புறத்தில் அந்த சிவப்பு நிற சிறிய கார் சிக்கியது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. அதிர்ஷ்டவசமாக அனைவரையும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வாகனம் ஓட்டினால் இது போன்று பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கலாம் எனவும், மேலும் ஓட்டுனர்களும் நிதானமாக பேருந்தை ஓட்டி சென்று உரிய நேரத்தில் பயணிகளை நிறுத்தத்தில் இறக்கிவிடலாம் எனவும், தேவையற்ற விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாமலும் தடுக்கலாம் எனவும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.