அரசு பேருந்து ஒட்டுநர்கள் நடத்துநர்கள் திடீர் போராட்டம்
நள்ளிரவில் அரசு பேருந்து ஒட்டுநர்கள் நடத்துநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 06:05 GMT
ஓட்டுநர் நடத்துனர் போராட்டம்
பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் நகர பேருந்து சில தினங்களுக்கு முன்பு காலதாமதமாக வருவதாக கூறி நசியனூர் அருகே பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஓட்டுனர் நடராஜை வேறு வழித்தட பார்த்து இயக்குமாறு வரியுறுத்தப்பட்டது.இதுதொடர்பாக ஒட்டுநர் நடராஜ் போக்குவரத்து உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டனர்.இதனால் ஏற்பட்ட மன ஊளைச்சலால் ஒட்டுநர் நடராஜ் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.இதனைத்தொடர்ந்து ஒட்டுநர்கள் மற றும் நடத்துநர்கள் நள்ளிரவில் பேருந்துகளை இயக்க மாட்டோம் என கூறி தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து மேலாளர் ஸ்வர்ணலதா பேச்சுவார்த்தை நடத்தி ஒட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் போராட்டத்தை கைவிட செய்து வழக்கம் போல் பேருந்துகளை இயக்கச்செய்தார்..