"அரசு பஸ் இருக்கை சேதம் நீண்டதுார பயணியர் அவதி"
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்துகளில் இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன
Update: 2024-02-25 13:26 GMT
காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக, திருப்பதி வரையில், 212எச் என்ற அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஒரு சில பேருந்துகளைத் தவிர, பெரும்பாலான அரசு பேருந்துகளில் இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, பேருந்து இருக்கைகளின் அடிபாகம் உடைந்து, மற்றொரு இருக்கை மீது, சேதமடைந்த இருக்கையை சாய்க்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி, நகரி, புத்துார் ஆகிய பகுதிகளுக்கு செல்வோர், இருக்கை வசதியின்றி, பேருந்தில் நின்று செல்ல வேண்டியுள்ளது. இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் இளைஞர்கள், ஒருவிதமாக சமாளித்து விடுகின்றனர். ஆனால், வயதானவர்கள் நீண்ட நேரம், பேருந்தில் நின்று செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, அரசு பேருந்துகளில் இருக்கை சேதத்தை சீரமைப்பதோடு, பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்."