தென்காசி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

தென்காசி அருகே அரசுப் பேருந்து சிறைபிடிப்பு. அரசுப் பேருந்து பொதுமக்கள் சிறைபிடிப்பு.

Update: 2024-07-04 08:32 GMT

பேருந்து சிறைபிடிப்பு

தென்காசி அருகே இராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதையடுத்து அப்பேருந்தை கிராமமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மேலமெஞ்ஞானபுரம் மற்றும் ராமலிங்கபுரம் பகுதியில் இருவேறு சமூக மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மேலமெஞ்ஞானபுரத்திற்கு தனியாகவும் ராமலிங்கபுரத்திற்கு தனியாகவும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், ராமலிங்கபுரம் கிராம பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் அருகில் உள்ள மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் பயணிகளை இறக்கி விடுவதாக தொடா் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த 4 பெண்கள் சுரண்டை பகுதியில் தையல் பயிற்சி படித்து விட்டு ஊருக்கு பேருந்தில் திரும்புகையில், மேலமெஞ்ஞானபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதாம். இதுகுறித்து, அவா்கள் ஓட்டுநரடிம்கேட்டபோது, தகாத வாா்த்தைகளால் திட்டினாராம். மேலும், அவருடன் வந்த பெண்களை மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் இறக்கி விடாமல் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனராம். இதனால் அப்பகுதி மக்கள் அதே பேருந்து மீண்டும் வீரகேரளம்புதூா் செல்வதற்காக ராமலிங்கபுரம் வந்த போது சிறை பிடித்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் தென்காசி டிஎஸ்பி நாகசங்கா் மற்றும் தென்காசி, குற்றாலம் காவல்துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பணிமனை மேலாளா் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்படும் என்று எழுதிக் கொடுத்தால் மட்டுமே பொதுமக்கள் கலைந்து செல்வதாக கூறினா்.தொடா்ந்து காவல் துறை நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து 2 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவிற்கு வந்தது; பேருந்து விடுவிக்கப்பட்டது.
Tags:    

Similar News