புறநகர் பகுதிகளில் வழக்கம்போல இயங்கும் அரசு பேருந்துகள்
கோவை புறநகர் பகுதிகளில் வழக்கம்போல இயங்கும் அரசு பேருந்துகள்;
Update: 2024-01-09 05:35 GMT
வழக்கம்போல இயங்கும் அரசு பேருந்துகள்
கோவை: ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட 25 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளன. இந்நிலையில் கோவை புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. காலை 4 மணி முதல் நகர பேருந்துகள் இயக்கப்படுவதாலும் போதிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கருமத்தம்பட்டி தொழிலாளர் முன்னேற்ற கழக செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கருமத்தம்பட்டி கிளையில் உள்ள 43 பேருந்துகளும் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர் மற்றும் நடத்தினார்கள் இயக்கி வருவதால் பொதுமக்கள் பாதிப்பு இன்றி பயணித்து வருகின்றனர். இதே போல் சூலூர் பணிமனை மற்றும் அன்னூர் பணிமனையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.