திறப்பு விழாவிற்கு தயாரான அரசு கல்லூரி - அமைச்சர் ஆய்வு

தாராபுரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ள அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்;

Update: 2024-02-26 01:36 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த  ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட அரசு சுமார் 12.50 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.அப்போது பணிகளை நிர்ணயித்த ஓராண்டு காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டார். தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தருவதாக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது 95 %சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் நிரணயிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படு திறப்பு விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 27,ஆம் தேதி காணொளி காட்சி மூலம் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் இறுதி கட்ட பணிகளையும் கல்லூரி ஆய்வகங்கள், காணொலி காட்சி மன்ற கூடங்கள் மற்றும் கல்லூரி கட்டிடம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் டாக்டர் கலைச் செல்வி,தாசில்தார் கோவிந்தசாமி,மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வி.கமலக்கண்ணன் மற்றும் அரசு துறை அதிகாராகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News