அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை வரவேற்ற மருத்துவர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிகளை துவக்கி வைக்க சேலம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவர்கள் வரவேற்றனர்.;

Update: 2024-03-08 02:36 GMT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற 53.39 கோடி மதிப்பில் கட்டப்படும் கட்டுமான பணி தொடக்க விழா, 33லட்சம் மதிப்பீட்டில் மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டுதல், முத்துக்காப்பட்டி துணை சுகாதார நிலையம் 33லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கவும், 

பின்னர் 50லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட பில்லா நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தல், 22.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் குடியிருப்பு திறந்து வைத்தல், 30லட்சம் மதிப்பீட்டில் சின்னவேப்பநத்தம் துணை சுகாதார நிலையம் திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், நடந்து முடிந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கவும் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று  காலை சென்னையிலிருந்து புறப்பட்டு சுமார் 12 மணி அளவில் சேலம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

Advertisement

அவருக்கு சேலம் சுகாதாரத்துறை இயக்குனர் சவுண்டம்மாள், சேலம் மாவட்ட இணை இயக்குனர் ராதிகா, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை கல்லூரி முதல்வர் மணி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், ஓமலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகபுஷ்பராணி, மருத்துவர்கள் பெருமாள், அருண்குமார் உள்ளிட்டோர் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் வரவேற்பை பெற்றுக்கொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News