அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கும்பகோணத்தில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-07-05 08:50 GMT

ஆர்பாட்டம் 

 தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வூதிய அரசாங்கம் சார்பில் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் பிரபாகரன் வருவாய்த்துறை அலுவலக சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார் நுண்கதிர் துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வம் வணிகவரித்துறை ஊழியர் சங்க வட்ட துணைத் தலைவர் கோபிநாத ஓய்வூதியர் சங்க கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ் வட்ட செயலாளர் பக்கிரிசாமி மாவட்ட குழு உறுப்பினர் பழ. அன்புமணி, கண்ணன் சண்முகம், சாரங்கன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்.

  இறுதியாக வட்ட பொருளாளர் மதியழகன் நன்றி தெரிவித்தார் ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 21 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர் புற நூலகர்கள் எம்ஆர்பி, செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெரும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க கால பணி காலமாக முறைப்படுத்த வேண்டும்.

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை அனைத்தும் காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளையும் விரிவுபடுத்தி சத்துணவு மையம் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags:    

Similar News