அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்து
விக்கிரவாண்டி அருகே அரசு விரைவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
Update: 2024-05-08 10:43 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும் பகோணத்தில் இருந்து சென் னைக்கு குளிர்சாதன வசதியு டன் கூடிய அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை கும்பகோணத்தைச் சேர்ந்த சகாய செல்வம் (வயது 51) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக மணப்பாறையைச் சேர்ந்த ராஜசேகர் (33) என்பவர் பணியில் இருந்தார். இதில் 43 பேர் பயணம் மேற்கொண்டனர், இந்த பஸ் அதிகாலை 1:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தது, அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது, இதில் பஸ்சில் பயணம் செய்த பரவைக்கோட்டை மோகன்ராஜ் (34), ஜெயபிரகாஷ் (25), ஆவடி அமுதா (57), மஞ்சள் மண்டி மோகன்தாஸ் (29), அவரது மனைவி ராகவி (25), மேடவாக்கம் மதிவாணி (63), கொளத்தூர் ரகுவர்ணன் (34), மன்னார்குடி தமிழ் பிரியா (26), டிரைவர் சகாய செல்வம், கண்டக்டர் ராஜ சேகர் உள்பட 21 பேர் படு காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள், இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.