உடல் உறுப்புகள் தானம் செய்த மூதாட்டிக்கு அரசு மரியாதை!
விபத்தில் காயமடைந்து சிகிச்சை எடுத்து வந்த மூதாட்டி உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 11:17 GMT
அரசு மரியாதை
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய காந்தம்மாள் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இறந்த நபரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செய்யும் வகையில் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஆகியோர் இறந்த நபரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.