இருளில் அரசு மருத்துவமனை - நடவடிக்கை எடுப்பார்களா ?
அரசு மருத்துவமனையில் இருள் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி வருகின்றனா். நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
By : King 24x7 Website
Update: 2023-12-15 05:52 GMT
திண்டுக்கல் பழனி மருத்துவமனையை சுற்றி கும்மிருட்டு கவ்வி உள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த அவலம் உயர் மின் கோபுர விளக்கு பல மாதமாக எரியாததால் ஏற்பட்டுள்ளது.இதனால் மகப்பேறு மருத்துவமனை, செல்ல பொதுமக்கள் தட்டு தடுமாறும் சூழல் உள்ளது.பல மாதங்கள் மின்சார வசதிகள் நிறுத்தபட்டுள்ளது. இதனால் உள் நோயாளிகள், புறநோயாளிகளின் குமுரலாக உள்ளது. துறை சார்ந்த தலைமை மருத்துவர் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.