அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நல சங்க கூட்டம்

பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் மற்றும் பென்ஷனர் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-05-12 07:33 GMT

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் மற்றும் பென்சனர் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் சங்கத்தின் நிர்வாகி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது இதில் நிர்வாகி முத்துசாமி மற்றும் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் தலைவர் மருதமுத்து மற்றும் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்,

கூட்டத்தில் பிறந்தநாள் காணும் ஓய்வூதியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது மற்றும் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி பாராட்டி, கௌரவிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்களுக்கு பாராட்டி , பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி தவறவிட்ட 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த, திருச்சி புறநகர் கிளையைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் மற்றும் நடத்துனர் கோபால் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது,

இதனை அடுத்து நீண்ட காலமாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல் அரசும், நீதிமன்றங்களும் தாமதப்படுத்துவதை, காலம் தாழ்த்தாமல் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும், பண பங்களிப்பு இல்லாத அனைவருக்கும் பயணிக்கும் மருத்துவ திட்டம், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடைமுறைப்படுத்திட வேண்டும், பென்ஷன் திட்டத்தை அரசை ஏற்று நடத்திட வேண்டும், உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று அரசு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் அனைத்து ஓதியர்களை ஒருங்கிணைத்து ஜூன் மாதத்தில் மிகப்பெரிய இயக்கம் நடத்திட வேண்டும் என மாநில பேரவையை கேட்டுக் கொள்வதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் பெரம்பலூர் கிளை செயலாளர் சூரியகுமார் நன்றி தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் மற்றும் பென்ஷன் நகர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News