வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அணிவகுத்து வந்த அரசு வாகனங்கள்

வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அணிவகுத்து வந்த அரசு வாகனங்களால் பரபரப்பு.;

Update: 2024-01-30 09:36 GMT
வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அணிவகுத்து வந்த அரசு வாகனங்களால் பரபரப்பு நிலவியது. தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வப் பெருந்தகை இன்று கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கோடங்கிபட்டி பிற்படுத்தப்பட்டோர் விடுதியிலும், மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், புகலூர் நகராட்சி அலுவலகத்திலும் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் நிகழ்ச்சியாக கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காலை ஆய்வு பணிகளை மேற்கொள்ள, தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர்,கு. செல்வப் பெருந்தகை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வதற்காக கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு காரில் வந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகளும், பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறையினரும் வரிசையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு காரில் வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News