அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
திண்டுக்கல் பொன்னகரம் அருகே அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கி சிறப்புரையாற்றினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 05:55 GMT
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திண்டுக்கல் அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் அருகே அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கி சிறப்புரையாற்றினார்.இதற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன்,தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வெள்ளிமலை, மாவட்ட கவுன்சிலர் விஜயன், சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெள்ளிமலை, திண்டுக்கல் ஒன்றிய குழு தலைவர் ராஜா, நத்தம் பேரூராட்சி தலைவர் சிக்கந்தர் பாட்ஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ராஜசேகர், அடியனூத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.