அரசின் நலத்திட்டங்கள் சிறப்பு புகைப்பட கண்காட்சி : அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியினை, அமைச்சர்கள் பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று (12.03.2024) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்பொருட்டும் இன்று சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், உங்களை தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா, கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமேதிட்டம் உள்ளிட்ட திட்டங்கள், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகள் குறித்து சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, 7 கிராமங்களை சேர்ந்த காணி பழங்குடியின மலைவாழ் மாணவ, மாணவியர்கள் கல்விகற்க இலவச படகு போக்குவரத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலையை சீரமைத்தது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், புதிய வேளாண் காடு வளர்ப்புத்திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது, பள்ளிமாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
அதேபோல தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களால் நமது மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்தும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெறலாம். கலை பண்பாட்டுத்துறையின் மூலம் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், நாகஸ்வரம் போன்ற கலைஞர்களை கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், தூத்துக்குடி கோட்டாட்சியர் ம.பிரபு, மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, வட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், உமரிசங்கர், ராமஜெயம், கிருபாகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Government Welfare Schemes Special Photo Exhibition